திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் பிரம்மோற்சவ விழா; பூத வாகனத்தில் சுவாமி வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2024 04:04
திருவள்ளூர்:திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது, விழாவில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி வலம் வந்து அருள்பாலித்து வருகிறார், விழாவில் இன்று பூத வாகனத்தில் தீர்த்தீஸ்வரர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் 12 நாட்களும் காலை மாலை வேதபாராயணமும், 20ம் தேதி காலை 10:00 மணிக்கு, திருமுறை திருவிழாவும் நடைபெறுகிறது.