பதிவு செய்த நாள்
06
ஏப்
2024
12:04
கோவில்பட்டி; கோவில்பட்டி, செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, 4:30 மணிக்கு திருவனந்தல்பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடந்தது. சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தன. காலை 6:00 மணிக்கு பக்தர்கள் கரகோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது. சுவாமி, அம்பாள், கொடிமரம், நந்தி, பலி பீடம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தன. கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜகுரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுபாஷ் சண்முகராஜ், திருப்பதிராஜா, ரவீந்திரன், நிருத்தியலட்சுமி, த.மா.கா., வடக்கு மாவட்டதலைவர் ராஜகோபால், கோயில் ஆய்வாளர் சிவகலை பிரியா, செயல்அலுவலர் வெள்ளைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். 9ம்நாள் (13ம்தேதி) திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடக்கிறது. 10ம்நாள் (14ம்தேதி) தீர்த்தவாரி நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடக்கிறது. 11ம்நாள் (15ம்தேதி) இரவு தெப்பஉற்சவ விழா நடக்கிறது.