கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2024 04:04
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திகடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.
மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த வருடத்திற்கான பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது அம்மனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வீதி உலா சென்றார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா நேற்று இரவு நடைபெற்றது. எஸ்.கரிசல்குளம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் தீச்சட்டிகள், முளைப்பாரி, முடி காணிக்கை,பூக்குழி இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபட்டனர்.அன்னதானம் நடைபெற்றது. வருகிற ஏப்.10ம் தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி பாண்டி, போதும் பொண்ணு ஆகியோர் செய்து வருகின்றனர்.