பதிவு செய்த நாள்
06
ஏப்
2024
04:04
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே சித்திரக்குடி கிராமத்தில் சீலைக்காரி அம்மன் கோயில் பங்குனி களரி உற்சவ விழா கடந்தவாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தினந்தோறும் மூலவரான அம்மனுக்கு பால்,சந்தனம்,குங்குமம் உட்பட 16 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. களரி விழாவை முன்னிட்டு காப்பு கட்டிய பக்தர்கள் ஆற்றாங்கரையில் இருந்து பால்குடம், அக்னிசட்டி, அலகுவேல் எடுத்து பக்தர்கள் விநாயகர், உலகம்மாள் கோயில் முளைக்கொட்டு திண்ணை உட்பட கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பின்பு சீலைக்காரி அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தலைவர் பிச்சை, உதவி தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். மாலை 108 விளக்குபூஜை நடந்தது.விழா கமிட்டியாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி,மதுரை உட்பட பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் கலந்து கொண்டனர்.