விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2024 10:04
விருதுநகர் ; விருதுநகர் பராசக்தி மாரியம்மனுக்கு பங்குனி பொங்கல் விழா. மார்ச் 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வாகனங்களில் வீதியுலா நடந்தன. இதன் தொடர்ச்சியாக இன்று பக்தர்களின் அக்னிசட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல் ரதம் இழுத்தல், பல வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துதல் நடைபெற்றது. விழாவில் குழந்தையுடன் அக்னி சட்டி எடுத்தும், கரும்புள்ளி,செம்புள்ளி குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவில் வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்று புகைப்படம் எடுத்து சென்றனர்.