ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா, கட ந்த, 15ம் தேதி துவங்கி, இம்மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. நாள் தோறும், அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார வழிபாடு நடத்தப்பட்டு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. விழாவின் ஒரு நிகழ்வாக நேற்று நடந்தேர் திருவிழாவில், அம்மன் கேடய வாகனத்தில் ஸ்ரீ சரஸ்வதி அலங்காரத்தில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில், வெற்றிலை கொண்டு அம்மனுக்கு நடந்த அலங்காரம் பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று த ரிசனம் செய்தனர்.