கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2024 01:04
தூத்துக்குடி; கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இன்று (ஏப்.13) முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை ஏப்.14ல் தீா்த்தவாரியும், ஏப்.15ல் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவினா், கோயில் இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா், செயல் அலுவலா் ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனர்.