சென்னை, அடையாறில் சங்கர விஜயம் திருவிழா; தமிழக கவர்னர் ரவி பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2024 12:04
சென்னை, சிருங்கேரி சாரதா பீடாதிபதி பாரதீ தீர்த்த மகா சுவாமிகளின் சன்யாச ஆஸ்ரம பொன்விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில், ஏழு நாட்கள் சங்கர விஜயம் திருவிழா நடத்தப்படுகிறது. விழாவில் தினமும் ஞான மார்க்கமே, பக்தி மார்க்கமே, சமுதாய பணியே, தேசிய ஒருமைப்பாடே ஆகிய தலைப்புகளில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தது. விழாவில் இன்று(13ம்தேதி) சிறப்பு சதஸ் நடைபெற்றது. இன்று காலை 11:00 மணிக்கு விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பங்கேற்று வித்யா பாரதி புரஸ்கார் விருது வழங்கி கவுரவித்தார். மாலை வினாடி - வினாவும், ஆதிசங்கரரும் மாணிக்கவாசகரும் எனும் தலைப்பில் தேச மங்கையர்க்கரசி சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார். விழாவில் புத்தக கண்காட்சியும், புகைப்பட கண்காட்சியும் இடம் பெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, வித்யா தீர்த்த பவுண்டேஷன் அமைப்பினர் செய்து வருகின்றனர்.