Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் சித்திரைத் திருவிழா ... சித்திரை திருவிழா: தஞ்சைக்கு ஏப்.,20, மதுரைக்கு ஏப்.,23ல் உள்ளூர் விடுமுறை சித்திரை திருவிழா: தஞ்சைக்கு ஏப்.,20, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் விழா; திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் விழா; திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2024
03:04

மயிலாடுதுறை; சீர்காழி பிரமபுரீஸ்வரர் கோவிலில் இன்று கோலாகலமாக நடந்த திருமுலைப்பால் விழாவில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரமபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மலைக்கோவிலான இங்கு குரு, லிங்க, சங்கமம் என பிரமபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் ஆகிய திருநாமங்களுடன் இறைவன் அருள் பாலிக்கிறார். சங்கம முர்த்தமான சட்டைநாதர் விஷ்ணுவின் தோலை சட்டையாக உடுத்தியதால் இப்பெயர் உண்டாயிற்று. சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் இக்கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் அழுது நின்ற போது உமையம்மை ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளித்த ஸ்தலமாகவும், ஞானம் பெற்ற திருஞானசம்பந்த பெருமான் தனது 3வது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவாரப் பதிகத்தை அருளிய தளமாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் சித்திரை 1ஆம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2ம் நாளான இன்று திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள திருஞானசம்பந்த பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சிவிகை பல்லக்கில் திருஞானசம்பந்தர் பிரம தீர்த்த கரையில் எழுந்தருள, தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் திருநிலை நாயகி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி தங்க கிண்ணத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருஞானசம்பந்தருக்கு காட்சியளிக்கும் வைபோகமும் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குழந்தைகள் ஞானம் பெற வேண்டி சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு பழங்கள் கலந்த பாலினை நைவேத்தியம் செய்து வழிபாடு நடத்தினர். முன்னதாக இவ்வாண்டுக்கான திருமுறை கலாநிதி பட்டம் விருத்தாசலம் சங்கரன் ஓதுவாருக்கு வழங்கப்பட்டது. திருமலைப்பால் விழாவில் மற்றொரு நிகழ்வாக திருஞானசம்பந்தர் திருக்கோளக்காவிற்கு எழுந்தருளி  திருப்பதிகம் பாடி  பொற்றாலம் பெற்று  பள்ளத்தில் சீர்காழி மீண்டருளும் காட்சி  நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சூப்பிரண்டு செந்தில் தலைமையிலான சிப்பந்திகள் செய்திருந்தனர். சித்திரை பெருவிழாவின் பிற முக்கிய நிகழ்வுகளாக 19ஆம் தேதி திருக்கல்யாணம், 22ஆம் தேதி திருத்தேர்,  28ஆம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar