திருள்ளாறு சனீஸ்வன் கோவிலில் பிரம்மோற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2024 05:04
காரைக்கால், காரைக்காலில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
காரைக்கால் திருள்ளாறு உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூரத்தியாக அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமர்ச்சியாக நடைபெறும் இந்தாண்டு இன்று பிரம்மோற்சவ விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக விழாவை முன்னிட்டு கொடி மரத்து விநாயகர் மற்றும் பந்தக்கால்களுக்கு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் பந்தக்கால்கள் கோவிலை சுற்றிவந்து முக்கிய இடங்களில் நடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி மே 5ம் தேதி கொடியேற்றம் மற்றும் 19ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.