புளியரை; புளியரை தெட்சிணாமூர்த்தி கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. புளியரையில் சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ சுயம்பு லிங்கமூர்த்தி மற்றும் தெட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் நடந்த தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நடந்தது. சுவாமி, அம்பாள், தெட்சிணாமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். சுவாமி, அம்பாள், குருபகவானுக்கு கனிகள், படைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடந்தன.