பதிவு செய்த நாள்
18
ஏப்
2024
12:04
செஞ்சி; கீழ்பாப்பாம்பாடி வேம்பி அம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது.
செஞ்சி அடுத்த கீழ்பாப்பாம்பாடி வேம்பி அம்மன், மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த 8 ம் தேதி துவங்கியது. அன்று காப்பு கட்டுதலும், கொடியேற்றமும் நடந்தது. 9ம் தேதி சாகை வார்த்தலும், பூங்கரக ஊர்வலமும், பொங்கல் வைத்து வழிபாடும் நடந்தது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் இரவு பூங்கரகம், சாமி வீதி உலாவும் நடந்து வந்தது. நேற்று காலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்த வேம்பியம்மன், மாரியம்மனை தேரில் ஏற்றி, மகா தீபாராதனையுடன் வடம் பிடித்தல் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி நடந்த போது கீழ்பாப்பாம்பாடி, திருவம்பட்டு, மாம்பட்டு, தையூர், சொரத்துார் உட்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தேரின் மீது காய்கனிகள், பழங்கள், தானியங்களை வாரி இறைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் தி.மு.க., தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, ஊராட்சி தலைவர் நாகமுத்து, துணை தலைவர் சேகர், விழா குழுவினர் ராமச்சந்திரன், தியாகராஜன், கஞ்சமலை, பாண்டியன், ஜெகதீசன் மற்றும் நுாற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.