பதிவு செய்த நாள்
20
ஏப்
2024
12:04
கடையநல்லுார்; கடையநல்லுார் பூமிநீளா சமேதநீலமணி நாதசுவாமி (கரியமாணிக்கப்பெருமாள்) கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. கடையநல்லுார் பூமிநீளா சமேத நீலமணிநாத சுவாமி கோயில்பிரம்மோற்சவ விழா கடந்த13ம் தேதி
கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணிக்கு திருக்கல்யாணம், புஷ்பபல்லக்கு ரதவீதி, பஜனை நடந்தது. வரும் 22ம் தேதி, காலை 9 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல், தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுக்கின்றனர். மாலை 5.30 மணிக்கு பஜனை, தேரில் இருந்து சுவாமி கோயிலுக்கு எழுந்தருளல், இரவு முத்துப்பல்லக்கு, தேர் தடம் கண்டருளல்நடக்கிறது. 23ம் தேதி காலை அபிஷேகம், இரவு யாகசாலைபூர்ணாகுதி, சுவாமி புறப்பாடு, தீபாராதனை, கொடியிறக்கம் நடக்கிறது. 24ம் தேதி காலைஅபிஷேகம், அலங்கார தீபாராதனை, நீலமணிநாதர், சீனிவாச திருக்கல்யாணம், இரவு நீலமணிநாதர் சுவாமி, சீனிவாசபெருமாள் கருட வாகனத்தில்வீதி உலா நடக்கிறது. விழா நாட்களில்தினமும் இரவு 7.30 மணிக்கு கலைநிகழ்ச்சிகள், 9 மணிக்கு சுவாமி புறப்பாடும் நடக்கிறது. கடையநல்லுார் பிராமண இளைஞர் சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு கரியமாணிக்கபெருமாள் கோயிலில்கடந்த14ம் தேதி துவங்கி வரும் 24ம் தேதி வரை பக்தி கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கடையநல்லுார் நீலமணி சேவா சமிதி மற்றும் பிராமண இளைஞர் சங்கத்தினர் செய்துள்ளனர்.