திருச்சி தாயுமானவர் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2024 11:04
திருச்சி; திருச்சிராப்பள்ளியில் உள்ள ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் சித்திரை தேர் திருவிழாவை சிறப்பாக நடைபெற்று வந்தது. திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தாயுமானசுவாமி, அம்பாள் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, தேர் நகர வீதிகளில் வலம் வந்தது. மாட்டுவார்குழலம்மி அம்மன் தேரும் வடம் படிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.