தங்கத்தேரில் திருப்பதி மலையப்பசுவாமி திருமாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2024 12:04
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி சலகட்லா வசந்தோத்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான இன்று திங்கள்கிழமை காலை ஸ்ரீ மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க ரதத்தில் திருமாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்களை தரிசனம் செய்தார். நடைபெற்ற விழாவில் காலை 8 மணி முதல் 10 மணி வரை நடந்த தங்க தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்த கோஷம் முழங்க தேர் இழுத்தனர். தங்க தேரோட்டத்தை தரிசிப்பதன் மூலம் லட்சுமி தேவி அருளால் செல்வம், இன்பம், ஆசீர்வாதம், அனைத்து தானியங்கள் மற்றும் ஸ்ரீவாரி கருணை ஆகியவற்றைப் பெறுவார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இஓ ஸ்ரீ ஏ.வி.தர்மரெட்டி தம்பதி, கோயில் துணை இ.ஓ.ஸ்ரீ லோகநாதம், விஜிஓ ஸ்ரீ நந்த கிஷோர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.