திருவண்ணாமலை சித்திரை வசந்த உற்சவம்; சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2024 03:04
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து, 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவ விழா நடக்கும். அதன்படி இன்று வசந்த உற்சவத்தின் எட்டாம் நாள் விழாவில் மூன்றாம் பிரகாரத்தில் ஒளி நிழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய, உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவாக, நாளை 23 ம் தேதி காலை, 10:00 மணிக்கு ஐயங்குளத்தில் தீர்த்தவாரியும், அன்றிரவு, கோபால விநாயகர் கோவிலில் மண்டபகப்படியும் நடக்கும். நள்ளிரவு, 12:00 மணியளவில் கோவில், 3ம் பிரகாரத்தில், தங்க கொடிமரம் முன்பு மன்மத தகனம் நிகழ்ச்சி நடக்கிறது.