திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் பிரமோற்சவ விழா; தேரோட்டத்திற்கு பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2024 02:04
காரைக்கால்; காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டத்திற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரன் பகவான் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இங்கு நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக் காணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரமோற்சவம் விழா மிக விமர்ச்சியாக நடைபெறும், இந்தாண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 15ம் தேதி பந்தல்கள் முகூர்த்தம் நடந்தது. இன்று விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 5 தேரோட்டத்திற்கான தேர்க்கால் முகூர்த்தம் நடைபெற்றது. வரும் மே.5ம் தேதி கொடியேற்றம் மற்றும் தியாகராஜர் உன்மத்த நடனம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சி தேர்திருவிழா வரும் 19ம் தேதி. 20ம் தேதி சனீஸ்வரபகவான் தங்ககாக வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள். கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.