பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடந்தது.
முதல் நாள் காலை, 9:00 மணிக்கு கொடியேற்றமும், மாலை, 6:30 மணிக்கு அன்னவாகனத்தில் பெருமாள், சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாள் மாலை, 3:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை, 6:30 மணிக்கு பெருமாள் தாயார்களுடன் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். மூன்றாம் நாள் மாலை, 3:30 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்காம் நாள் தீர்த்தவாரி, கொடி இறக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.