பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2024 05:04
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரை திருவிழாவில் பத்தாம் திருநாள் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதையொட்டி இன்று பிப். 22ம் தேதி காலை 8:00 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து மண்டகப்படியில் அம்பாளும், சுவாமியும் எழுந்தருளினர். சிறப்பு வழிபாடு அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.