Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 64 திருவிளையாடல்களை சொல்லும் ... தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம் தூத்துக்குடி சிவன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆற்றில் இறங்கிய ஆண்டாள், ரெங்கமன்னார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆற்றில் இறங்கிய ஆண்டாள், ரெங்கமன்னார்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2024
12:04

ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டாள், ரெங்க மன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று கோலாகலமாக நடந்தது.

இதனை முன்னிட்டு இன்று காலை கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. பின்னர் இருவரும் பச்சை பட்டு உடுத்தி ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர். காலை 9:05 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்ட ஆண்டாள், ரெங்க மன்னார் மாடவீதி, மேலரத வீதிகள் வழியாக ஆத்துக்கடை சந்திப்பு வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். அங்கு காலை 10:45 மணிக்கு ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. அப்போது ஆண்டாளை, ரெங்க மன்னார் மூன்று முறை சுற்றிவரும் வையாளி சேவை நடந்தது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்றோர்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar