Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன்கோட்டையில் வெண்பட்டு ... ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆற்றில் இறங்கிய ஆண்டாள், ரெங்கமன்னார் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
64 திருவிளையாடல்களை சொல்லும் மீனாட்சி அம்மன் கோவில் தேர்கள்
எழுத்தின் அளவு:
64 திருவிளையாடல்களை சொல்லும் மீனாட்சி அம்மன் கோவில் தேர்கள்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2024
11:04

மதுரை சித்திரைத்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று(ஏப்.,21) நடக்கிறது. நாளை மாசி வீதிகளில் 64 திருவிளையாடல்கள், அம்மன், சுவாமி எழுந்தருளும் வாகனங்களை குறிக்கும் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய திருத்தேர்கள் வலம் வருகின்றன.

மீனாட்சி கோவில் சித்திரைத்திருவிழா ஏப்.,12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,19ல் பட்டாபிேஷகமும், நேற்று திக்குவிஜயமும் நடந்தது. நாளை தேரோட்டம் நடக்கிறது. கோவிலின் இரண்டு தேர்களிலும் 64 திருவிளையாடல்கள் ஒவ்வொரு வகையிலும் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. அம்மனின் சிறுவயது முதல் நடந்த விஷயங்கள், பட்டாபிஷேகம், திக்குவிஜயம், சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் இதில் நுணுக்கமாக இடம் பெற்றுள்ளன. சித்திரை திருவிழாக்களில் அம்மன் வலம் வரும் ரிஷப, கற்பக விருட்சகம் உள்ளிட்ட வாகனங்களும், விநாயகர் முதல் சுப்பிரமணியர் வரை அனைத்து தெய்வங்களும் வரிசையாக இதில் சிலையாக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இத்தேர்கள் வடிவமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தலைமை பட்டர் ஹாலாசநாதர் கூறியதாவது: பட்டாபிேஷகத்தை தொடர்ந்து எந்த ஒரு ராஜாவோ ராணியோ பட்டாபிஷேகம் முடிந்தபின் திக்குவிஜயம் செய்ய வேண்டும். அதாவது அம்பாள் எட்டு திக்கில் இருக்கும் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை வெல்ல புறப்படுவார். அவர்களை வெற்றி கொண்டபின் கைலாயம் சென்று நந்திகேஸ்வரரை சந்திக்கிறார். அவர் சுவாமியிடம் தெரிவிப்பதற்குள் சுவாமியே நேரில் வந்து விடுகிறார். அம்பாள் இயற்கையாகவே மூன்று மார்புகளோடு பிறந்தவள். அதனால் வருந்திய பாண்டிய மன்னனிடம் அசரீரி கூறுகையில், ஒரு பையனுக்கு என்னென்ன சடங்குகள் செய்வாயோ அது அனைத்தையும் அம்பாளுக்கு செய்ய வேண்டும். பருவம் எய்தியபின் இவளது கணவனை இவள் பார்க்கும்பொழுது இவளுக்குண்டான பெண் குணம் வந்துவிடும் என கூறியது. அதன்படி திக்குவிஜயத்தில் அம்மன் சுவாமியை கண்டவுடன் மூன்றாவது மார்பகம் மறைந்து கையில் உள்ள ஆயுதங்களை விடுத்து வெட்கத்துடன் முகம் சிவந்து காணப்படுகிறாள். அதை கண்ட சுவாமி, நாளை உன்னை மதுரையில் வந்து திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி அனுப்பினார். அதன்படியே திக்குவிஜயம் முடிந்து இன்று திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; காரமடை அரங்கநாதர் கோவிலில், மார்கழி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை மாவட்டத்தில் ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட ராமர் ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஹனுமன் ஜெயந்தி விழா வரும் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் நடந்த மங்கள வேல் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் துாண்கள், பிரகாரங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar