தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2024 12:04
தூத்துக்குடி; சிவன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
தூத்துக்குடி இத்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலித்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு நடைபெற்றது. பெரிய தேரில் சுவாமி - அம்பாளும், சிறிய தேரில் கணபதி- முருகரும் எழுந்தருள சிறப்பு வழிபாடுகளுக்கு பின் தேர் வடம் பிடிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சங்கர ராமேஸ்வரர், பாகம்பிரியாள் அம்மன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க, மேளதாளம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொளுத்திய வெயிலில் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயில் மேற்குப் பகுதியில் உள்ள வளாகம் மற்றும் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.