சித்ரா பவுர்ணமி ; பழநி பெரிய நாயகி அம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2024 05:04
பழநி; பழநியில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பால்குட அபிஷேகம், வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.
பழநியில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து பால் குடங்கள் எடுத்து வந்து திருஆவினன்குடி கோயிலில் அபிஷேகம் நடைபெற்றது. ஏப்.23ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை, முத்துகுமாரசுவாமி எழுந்தருளினார். பெரியநாயகி அம்மன் கோவில் இருந்து 108 பால்குடங்கள், திருஆவினன்குடி கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் கந்தவிலாஸ் செல்வகுமார், கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டனர். நேற்று இரவு பெரிய நாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி வெள்ளித்தேரில் எழுந்திருளினார். அதன் பின் ரத வீதியில் வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.