பதிவு செய்த நாள்
23
ஏப்
2024
06:04
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாதாளசெம்பு முருகன் கோயில் உள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு பாலாபிஷேகம், பழக்காப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. ஏராளமான வெளிமாவட்ட பக்தர்கள், காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது பால் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் உள்பட திரவிய அபிஷேகம் நடந்தது. ஓம்கார விநாயகர், ஓம்கார நந்தி, வாலை சக்தி அம்மன், போகர், முத்தானந்தர், வாலையானந்தர், குண்டலினி சித்தர்களுக்கு, விசேஷ மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.