கரையேறவிட்ட குப்பம் அப்பர் குளத்தில் அப்பர் சிலையை பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2024 04:04
கடலூர்; வண்டிபாளையம் கரையேறவிட்ட குப்பத்தில் உள்ள அப்பர் குளத்தில் அப்பர் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சைவ குறவர்களின் ஒருவரான அப்பர் என்கிற திருநாவுக்கரசர் சைவ சமயத்தின் சிறப்புகளை பாடி வந்தார். அதனை அறிந்த சமண சமயத்தைச் சேர்ந்த மகேந்திரவர்ம பல்லவ மன்னன் உத்தரவின் பேரில் திருநாவுக்கரசர் கல்லில் கட்டி கடலில் வீசப்பட்டார். அப்போது திருவாவுக்கரசர் ‘சொற்றுணை வேதியன்’ எனத் தொடங்கும் நமச்சிவாய பதிகத்தை ஓதியபடி கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலூர், வண்டிப்பாளையத்தில் கரையேறி, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளிவரும் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரரை வழிபட்டார். இந்த வரலாற்று பெருவிழா ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாத அனுஷ நட்சத்திரத்தன்று பாடலீஸ்வரர் கோவில் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சி நடைபெறும் வண்டிபாளையம் கரையேறவிட்ட குப்பத்தில் உள்ள அப்பர் குளத்தில், அப்பர் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.