பதிவு செய்த நாள்
26
ஏப்
2024
12:04
உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி அம்மன் அருள்பாலித்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில், நுாற்றாண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நடப்பாண்டு தேர்த்திருவிழா, கடந்த, 9ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், மாவிளக்கு, முளைப்பாலிகை ஊர்வலம் என உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும் அம்மன், காமதேனு, யானை, ரிஷபம், அன்ன வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். விழாவில் நேற்று மாலை, 4:15 மணிக்கு, பக்தர்களின் ஓம் சக்தி கோஷம் முழங்க, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஓம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு மத்தியில், அசைந்தாடி வந்த தேரில், அம்மன் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் இன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.