இடைப்பாடி: இடைப்பாடியில் உள்ள பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம், நான்கு நாட்கள் நடந்தது. இடைப்பாடியில் உள்ள பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா xகொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் ஸ்வாமி ஊர்வலம் நடந்தது. நேற்று தேவகிரி அம்மனுக்கும், நஞ்சுண்டேஸ்வரர் ஸ்வாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தில், 2,000க்கும் மேற்பட்ட கட்டளைதாரர்கள் மற்றும் இடைப்பாடி சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்று இரவு, தேவ கிரி அம்மனுடன், நஞ்சுண்டேஸ்வரர் ஸவாமி முத்துரதத்தில் எழுந்தருளி, இடைப்பாடி நகரை பவனி வந்தார். சித்திரை தேர்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று நடைபெற்றது. நிகழச்சியில், இடைப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமப்புற மக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.