பதிவு செய்த நாள்
26
ஏப்
2024
03:04
மயிலாடுதுறை; மயிலாடுதுறை சித்தர்காட்டில், திரிபுரசுந்தரி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. அங்கு வந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அதிக சத்தத்தால் இடையூறு ஏற்படுவதாக கூறி, ஒலிபெருக்கியை நிறுத்தியதுடன், கோவில் அர்ச்சகரை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது என, அதிகாரிகள்
உத்தரவிட்டனர். இதை கண்டித்து, பக்தர்கள் மற்றும் ஹிந்து அமைப்புகளை சார்ந்ததோர் நேற்று முன்தினம், ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கூம்பு வடிவ ஒலிபெருக்கியை
பயன்படுத்ததாமல் வே று வகை ஒலிபெருக்கியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.