பதிவு செய்த நாள்
26
ஏப்
2024
06:04
தொண்டாமுத்தூர்; பேரூரில் உள்ள வடகைலாயநாதர் கோவில் மற்றும் அழகிய திருச்சிற்றம்பலநாதர் கோவில் கும்பாபிஷேக விழா க கோலாகலமாக நடந்தது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உப கோவிலான வடகைலாயநாதர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, வந்து முதல் காலயாக பூஜையும், இன்று காலை இரண்டாம் காலயாக பூஜையும் நடந்தது. அதன்பின், கடங்கள் புறப்பாடு நடந்து, காலை, 7:35 மணிக்கு, செந்தில் ராஜ குருக்கள் தலைமையில், மங்கள வாத்தியங்கள் முழங்க, வடகைலாயநாதர் கோவில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து தென்கைலாயநாதருக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மஹா தீபாராதனை நடந்தது. அதேபோல, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உப கோவில்களில் ஒன்றான அழகிய திருச்சிற்றம்பலநாதர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று துவங்கியது. நேற்று விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 8:20 மணிக்கு, அழகிய திருச்சிற்றம்பலநாதர் கோவில் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.