வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா சந்தன காப்பு உற்சவத்துடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2024 11:04
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா நேற்று இரவு சந்தன காப்பு உற்சவத்துடன் நிறைவு பெற்றது.
மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா கடந்த புதன்கிழமை நடைபெற்றது.இதனை தொடர்ந்து வைகை ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த மானாமதுரை கிராமத்தார்கள் மண்டகப்படியில் நடைபெறும் பக்தி உலாத்தல் மற்றும் நிலாச்சோறு நிகழ்ச்சியும் பின்னர் கருட வாகனத்தில் வீதி உலா சென்று தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது.அங்கு வீரஅழகர் ராமர்,கிருஷ்ணர், மச்ச அவதாரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மானாமதுரை அப்பன் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளிய வீர அழகருக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு சந்தன காப்பு உற்சவத்துடன் மேல்தரையில் உள்ள வீதிகளில் மீதி உலா வந்து கோயிலை வந்தடைந்தை தொடர்ந்து சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன்,அர்ச்சகர் கோபி மாதவன்(எ) முத்துச்சாமி உள்ளிட்ட பல செய்திருந்தனர்.