அவிநாசி லிங்கேஸ்வரர் வேத ஆகம பாடசாலை மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2024 11:04
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவில் மஹோத்ஸவ சிறப்பு பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு பெங்களூர் வாழும் கலை நிறுவனர் வேத விஞ்ஞான மஹா வித்யா பீடத்தின் ஸ்தாபகசார்யர் பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியால் நிறுவப்பட்ட வேத ஆகம மஹா பாடசாலையில் வேதம் பயின்ற ஸ்ரீ ஸ்ரீ குருகுலத்தைச் சேர்ந்த 49 மாணவர்கள் வேதசிவாகம திருமுறை கல்வி பயின்று ஏப் 14ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற்ற தேர் திருவிழாவில் மஹோத்ஸவத்தில் பயிற்சி பெற்ற 17 மற்றும் 20ம் பிரிவு மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் விழா பாடசாலை முதல்வர் அவிநாசி சுந்தரமூர்த்தி சிவாச்சார்யார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செல்வீஸ்வரி குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். விழாவுக்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வேத ஆகம மஹா பாடசாலை ஸ்ரீ ஸ்ரீ குருகுலத்தின் முதல்வர் சுந்தரமூர்த்தி சிவாச்சார்யார் வரவேற்று சிறப்பித்தார். 17 மற்றும் 20ம் பிரிவு மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். இதில், அறங்காவலர் குழு தலைவர் டாக்டர் பாப்பீஸ் சக்திவேல் மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவிநாசி கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், பழனி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் அறங்காவலர் சுப்ரமணியம்,வாழும் கலை பயிற்சி ஆசிரியர் தனபால், பழனியப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ராஜ்குமார்,சோமசுந்தரம் மற்றும் அறங்காவலர்கள் பொன்னுச்சாமி, ஆறுமுகம், விஜயகுமார், கவிதாமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அவிநாசி கோவிலின் பெருமைகளையும் சைவ நெறிகளையும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் குருத்துவம், முதல் ஸ்தானிகம் சிவகுமார் குருக்கள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி கூறினார்.சிவன்மலை சிவாஜலபதி ஸ்வாமி கோவில் சிவசுந்தரசிவம் நிகழ்ச்சிக்கு நன்றி வரை வழங்கினார்.