பொம்மராஜபேட்டையில் தீமிதி விழா துரியோதனன் படுகளம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2024 12:04
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜபேட்டையில் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், அர்ச்சுனன் வில் வளைப்பு, திரவுபதியம்மன் திருக்கல்யாணம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடந்து வருகின்றன. திருவிழாவின் 18ம் நாளான நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளாகத்தில் பிரமாண்டமாக துரியோதனன் சிலை களிமண்ணால் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு, துரியோதனன் மற்றும் பீமசேனன் இடையே நடந்த 18ம் போர்க்கள நிகழ்வு, தெருக்கூத்து நடிகர்களால் நடத்தப்பட்டன. இதில், துரியோதனனை பீமசேனன் வெற்றி கொண்டார். இந்த நிகழ்ச்சியை காண திரளான பக்தர்கள் கூடியிருந்தனர். மாலை 6:00 மணிக்கு, திரவுபதியம்மன் அக்னி குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த திரளான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.