செஞ்சி வள்ளலார் கோவில் ஆண்டு விழா; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2024 05:04
செஞ்சி; செஞ்சி முல்லை நகர் வள்ளலார் கோவில் 10 ஆண்டு விழா நடந்தது. செஞ்சி முல்லை நகரில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் கோவிலின் 10 ஆம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு ஜோதி வழிபாடும், 7 மணிக்கு கொடியேற்றமும், 8 மணிக்கு வள்ளலார் வீதி உலாவும் நடந்தது. 12 மணிக்கு சொற்பொழிவும், 1 மணிக்கு நடுப்பட்டு புருஷோத்தமன் குழுவினரின் வில்லுப்பாட்டும், 2 மணிக்கு சத்ய சாயி சேவ சமீதியின் சார்பில் சர்வ மத பஜனையும் நடந்தது. மாலை 5 மணிக்கு ஜனனி நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானம் வழங்கினர். இதில் அமைச்சர் மஸ்தான், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அறங்காவலர் சர்தார் சிங் மற்றும் அருட்பெருஞ்ஜோதி மன்ற நிர்வாகிகள், செஞ்சி வட்ட சன்மார்க்க சங்கத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.