Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று அயோத்தி செல்கிறார் திரவுபதி ... திருப்புத்தூர் தர்மசாஸ்தா அய்யப்பசுவாமி கோயிலில் வருடாபிஷேகம் திருப்புத்தூர் தர்மசாஸ்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆன்மிக பயணமாக கம்போடியா சென்ற சத்குரு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆன்மிக பயணமாக கம்போடியா சென்ற சத்குரு

பதிவு செய்த நாள்

01 மே
2024
04:05

தொண்டாமுத்தூர்; கம்போடியா நாட்டிற்கு ஆன்மிக பயணமாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, தென்கிழக்கு ஆசியாவின் ஆன்மீக அம்சங்கள் குறித்து ஆராய்வதற்காக, 10 நாள் ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, கம்போடியா நாட்டிற்கு சென்ற சத்குருவை, அந்நாட்டின் பிரதமர் ஹன் மானெட் சத்குருவை வரவேற்று வாழ்த்தி எழுதிய கடிதத்தை, அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் சோக் சோகன், சத்குருவை வரவேற்று, கடிதத்தை வழங்கினார். தொடர்ந்து, சத்குரு, கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் போன்ற வரலாற்று மற்றும் தொல்லியல் இடங்களுக்கு சென்று, அதன் கலாச்சாரம் ஆன்மிக மற்றும் அறிவியல் அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கம்போடியா நாட்டு பிரதமர், சத்குருவிற்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கம்போடியா நாட்டு மக்கள் மற்றும் என்னுடைய சார்பில், சத்குருவை சியம் ரீப் நகரத்திற்கு அன்போடு வரவேற்பதோடு, இங்கு நீங்கள் தங்கும் நாட்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். மேலும் உங்களின் தியான நிகழ்ச்சிக்கு, அங்கோர் தொல்லியல் பூங்காவை நீங்கள் தேர்ந்தெடுத்தது மூலம் நாங்கள் கவுரவிக்கப்பட்டுள்ளோம். தாங்கள் இங்கு இருக்கும் காலம் அமைதியால் குறிக்கப்படட்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: கம்போடியாவின் பிரதம மந்திரி ஹன் மானெட், தங்களின் அழைப்பு கடிதத்திற்கும், வரவேற்பிற்கும் நன்றி. இந்த தேசத்தின் நினைவு சின்னங்களும், கலாச்சாரமும், மனித புத்தி கூர்மைக்கும், உறுதிக்குமான ஒரு பிரமிக்க வைக்கும் அஞ்சலியாக உள்ளது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar