பதிவு செய்த நாள்
03
நவ
2012
10:11
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவ நிறைவு விழா நடந்தது. இக்கோவிலில் பவித்ரோத்ஸவத்தையொட்டி தொடர்ந்து 6 நாட்கள் காலை 8 மணிக்கு பெருமாள், தாயார் மண்டபம் எழுந்தருள செய்தனர். அக்னி பிரதிஷ்டை, கலச ஸ்தாபனம், பவித்ர மாலை சமர்பித்தல், பூர்ணாஹுதி, சாற்றுமுறை செய்து, மாலை 5 மணிக்கு யாகசாலை ஹோமம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை வைபவங்கள் நடந்தது.நிறைவு நாள் காலை 8 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளல், அட்சதை ஆசீர்வாதம், பிரம்மகோஷம், சாற்றுமுறை நடந்தது. தொடர்ந்து தீர்த்தப்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சிறப்பு பூஜைகளை தேசிக பட்டர் செய்து வைத்தார்.