எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தினமலர் செய்தி எதிரொலியாக கும்பாபிஷேக விழா துவங்கி இரண்டு நாட்கள் பாலாலய விழா சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. எட்டயபுரம் தாலுகா கீழநம்பிபுரத்தில் இந்து அறநிலையத்திற்கு உட்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. தினமலர் செய்தி எதிரொலியாக செப்டம்பர் 21 ஆம் தேதி கும்பாபிஷேக விழா வேலைகள் சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. அதையடுத்து அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு தினங்கள் பாலாலய விழா சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக நடந்தது. கீழநம்பிபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் விமான பாலாலய விழா அக் 27 ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவக்கியது. அதையடுத்து புண்ணியாக வாசனம், கும்ப அலங்காரம், கடஸ்தாபனம் வேதிகை பூஜை, முதல்காலயாக வேள்வி நடந்தது. கடந்த 28ம் தேதி விநாயகர் வழிபாடுடன் இரண்டாம் காலயாக வேள்வி நடந்தது. மஹா பூர்ணஹர்தி சதுர்வேத திருமறை பாராயணம் நடந்தது. இரவில் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை நடந்தது. அதையடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் விமான பாலாயம் சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் கோவில் பணி கிளர்க் பாரதி பஞ்.தலைவர் பாலமுருகன், ராமகிருஷ்ணன், வெங்கட சுப்பிரமணியன் மற்றும் ஊர்பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.