Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கம்பீர விநாயகர் கோவிலில் ... சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் வழிபடுவோர் விரும்புவதாக அறங்காவலர் மனு சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை தேரோட்டம்

பதிவு செய்த நாள்

07 மே
2024
12:05

திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நடந்த சித்திரை தேரோட்டத்தில், கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா, ஏப்., 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பின், நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து சேவை சாதித்தார். ஏழாம் திருநாளான்று, நம்பெருமாள் திருச்சிவிகை வாகனத்தில் புறப்பாடாகி, நெல்லளவு கண்டருளினார். அதன்பின், சித்திரை வீதிகளில் வலம் வந்த நம்பெருமாள் திருமஞ்சம் கண்டருளினார். நேற்று முன்தினம், நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் சித்திரை வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒன்பதாம் திருநாளான நேற்று அதிகாலை, ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோவிலில் இருந்து வந்த கிளி மாலையை அணிந்து அதிகாலை, 5:15 மணிக்கு திருதேரில் எழுந்தருளினார். காலை 6:00 மணிக்கு, கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்த தேர், நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம், நேற்று உள்ளூர் விடுமுறை அறிவித்தது.

துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில் முதலாவது தலமாகவும், சூரியனுக்கு அதிபதியாகவும் விளங்கும் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்., 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 2ல் சுவாமி கள்ளபிரான், காய்சினிவேந்தபெருமாள், எம்இடர்கடிவான், பொலிந்துநின்றபிரான் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடந்தது. இரவில் கருடவாகனத்தில் குடவரை பெருவாயில் எதிர்சேவையும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக சுவாமி கள்ளபிரான் அதிகாலையில் திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், கோவிந்தா, கோபாலா என்ற கோஷங்களுடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தது. திருத்தேர் ஓடிய வீதிகளில் கோவில் நிர்வாகம் சார்பில், டேங்கர் லாரிகளில் தண்ணீர் வழங்கப்பட்டது. மேலும், திருத்தேரை வடம் பிடித்து இழுத்தவர்களுக்கு, பொதுமக்கள் சார்பில் மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. கடும் வெயிலை பொருட்படுத்தாமல் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar