செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடந்தது.செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மற்றும் காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் செய்தனர்.இரவு 9 மணிக்கு ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், மகா தீபாராதனையும் செய்தனர். பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார்.செஞ்சி சுந்தரவிநாயகர் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்து, அன்னாபிஷேகம் செய்தனர். முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அன்னாபிஷேகமும் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.