பதிவு செய்த நாள்
05
நவ
2012
11:11
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் அறிக்கை: இக்கோயிலில், நவ.,13 தீபாவளியன்று, அம்மனுக்கு வைரக்கிரிடம், தங்ககவசமும், சுவாமி சுந்தரேஸ்வரருக்கு வைர நெற்றிப்பட்டையும் சாத்தப்படுகிறது. ஐப்பசி பூரம் நவ.,9ல் நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு, மூலஸ்தான அம்மனுக்கும், உற்சவ அம்மனுக்கும் ஏத்தி இறக்குதல் சடங்கு நடக்கிறது. கோலாட்ட உற்சவம் நவ.,13 முதல் 19 வரை நடக்கிறது. நவ.,14 முதல் 18 வரை தினமும் மாலை 6 மணிக்கு அம்மன், ஆடிவீதியில் சுற்றி வந்த பின், மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். நவ.,18 மாலை 6 மணிக்கு, வெள்ளி கோரதத்தில் அம்மன் எழுந்தருளி, ஆவணி மூல வீதிகளில் உலா வருகிறார். நவ.,19ல், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி, ஆடிவீதியில் புறப்பாடு நடக்கிறது.கந்தசஷ்டி உற்சவம் நவ.,14 முதல் 19 வரை நடக்கிறது. நவ.,20 காலை 7 மணிக்கு, கூடல்குமாரருக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியும், விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. மேற்கூறிய நாட்களில், உபயதாரர் சார்பாக, உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா ஆகிய சேவைகள் நடத்தப்படமாட்டாது, என கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.