அரியகுடி புத்துாரில் மாசாணி அம்மன் கோயில் பூக்குழி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2024 04:05
பரமக்குடி; பரமக்குடி அருகே அரியகுடி புத்துார் கிராமத் தில் சிவசக்தி அங்காள ஈஸ்வரி மற்றும் மாசாணி அம்மன் கோயில் பூக்குழி விழா நடந்தது. போகலுார் ஒன்றியம் அரியகுடி புத்துாரில் சிவசக்தி அங்காள ஈஸ்வரி, மாசாணி அம்மன் கோயில் உள்ளது. இங்கு பேச்சியம்மன், பக வதி அம்மன், கருப்பண சுவாமி தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். தொடர்ந்து 6 ம் ஆண்டு சித்திரைத் திருவிழா இங்கு கோலாகலமாக நடந்தது. இதன்படி ஏப்.29 மாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் காப்பு கட்டப்பட்டு விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராத னைகள் நடந்தன. மேலும் அம்மன் தேர்ப்பவனி நடத்தப்பட்டது. மே 7 மாலை 6:00 மணிக்கு கரகம் எடுத்தல், அக்னி சட்டி, பால்குடம், பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. இரவு 11:00 மணிக்கு அமாவாசை நாளில் பூக்குழி உற்சவம் கோலாகலமாக நடத் தப்பட்டது. ஏராளமான காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழியில் இறங்கி அம்மனை வழிபட்டனர். நேற்று காலை 9:00 மணி முதல் மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.