ஊட்டி மாரியம்மன் கோவில் வாடகை பாக்கி ரூ.2.45 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2012 11:11
ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான கடைகளில் வர்த்தகம் செய்யும் ஐந்து பேர் 2.45 லட்ச ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.இந்து அறநிலைய ஆட்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை அனுபவித்து அதற்குரிய வாடகை பாக்கியை செலுத்தாமல் உள்ளவர்களின் பெயர் பட்டியலை அந்தந்த கோவில்களுக்கு முன் வைக்க, அறநிலைய ஆட்சித் துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஊட்டி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான கடைகளில் வர்த்தகம் செய்யும் 11 பேரில், ஐந்து வர்த்தக நிறுவனத்தினர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 24 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.அவர்களின் விபரம்:முகமது ஜாபர் சேட் (பாம்பே வேர் ஹவுஸ்) 38 ஆயிரத்து 864 ரூபாய், பெள்ளி மேஸ்திரி (லட்சுமி ஹார்டுவேர்) 73 ஆயிரத்து 533 ரூபாய், பாலகுருசாமி (அம்பாள் டெக்ஸ்டைல்ஸ்) 61 ஆயிரத்து 51 ரூபாய், ராஜாராம் (சாவித்திரியம்மா மாவு மில்) 51 ஆயிரத்து 938 ரூபாய், லட்சுமி துணிக்கடை 19 ஆயிரத்து 698 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். நகரின் வர்த்தக பகுதியாக உள்ள இடத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான கடைகளில் வர்த்தகம் நடத்துவோர் தினமும் பல ஆயிரம் ரூபாயை வருமானமாக சம்பாதித்து வரும் நிலையில், மிகக் குறைந்த மாத வாடகையை கூட செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். வாடகை பாக்கி பட்டியல் வைத்திருப்போரின் பெயர் பட்டியல் கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ளது.