அட்சய திருதியை; திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2024 03:05
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு இன்று காலை 6:00 முதல் 11:00 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திதியை அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை நாளில் எது வாங்கினாலும் அவை வளரும் என்பதை ஐதீகமாக கருதப்படுகிறது. பத்ம புராணத்தில் விஷ்ணு பகவான் நாரத மகரிஷியிடம், இந்த நாளில் செய்யப்படும் செயல்கள் பலனளிக்கும் அவற்றின் விளைவுகள் ஒருபோதும் குறையாது என்று கூறுகிறார். அட்சய திருதியை முன்னிட்டு உற்ஸவர் கல்யாண ஜெகநாதப்பெருமாளுக்கு இன்று காலை விசேஷத் திருமஞ்சனமும் சற்று முறை கோஷ்டி பாராயணம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாள் திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வீடுகளில் மகாலட்சுமி படங்களை வைத்து தானியங்கள், உப்பு, மஞ்சள் பொடி மற்றும் ஆபரணங்களை வைத்து வழிபாடு செய்தனர்.