அட்சய திருதியை; முத்தங்கி சேவையில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2024 04:05
போடி; அட்சய திரிதியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. பக்தர்கள் வாங்கி வந்த தங்களது ராசிக்கான பொருட்களை தானமாக வழங்கினர். தாங்கள் கொண்டு வந்த பொருட்களை தாயாரின் சன்னதியில் வைத்து அர்ச்சனை செய்து வாங்கி சென்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரின் தரிசனம் பெற்றனர்.