அயோத்தியில் அட்சய திருதியை; அஸ்ஸாமின் தங்க இழைகளால் செய்யப்பட்ட ஆடையில் ராமர் தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2024 04:05
அயோத்தி; அட்சய திருதியையான இன்று பகவான் ஸ்ரீ ராம்லாலா சர்க்கார் தரிசனம் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
புண்ணிய பூமியாக போற்றப்படும் அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் அயோத்தி ராமரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அட்சய திருதியை தினமான இன்று சரயு நதியில் புனித நீராடி, ஏராளமான பக்தர்கள் ஸ்ரீராமரை தரிசனம் செய்தனர். அசாமில் இருந்து மிகவும் சிறப்பு வாய்ந்த எரி மற்றும் மூங்கா பட்டுத் துணியால் ஆன, தங்க நூல்களால் அலங்கரிக்கப்பட்டு, ஷங்கம், சக்கரம், கட, மயில் மற்றும் தாமரை போன்ற வைணவ சின்னங்கள் பொறிக்கப்பட்ட சிறப்பு ஆடையில் ராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.