பந்தலூர் கூத்தாண்டவர் கோவில் திருவிழா; காப்பு கட்டும் நிகழ்ச்சி.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2024 04:05
பந்தலூர்; பந்தலூர் அருகே உப்பட்டி காட்டிக்குன்னு என்ற இடத்தில் கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இதன் ஆண்டு திருவிழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்று விழா உடன் துவங்கியது. திருநங்கை கார்த்திகா மற்றும் ஹாரினி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நாளை நாக கன்னி பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுவதுடன் கூத்தாண்டவர் கண் திறப்பு மற்றும் பழி பூஜைகள், தாலி கட்டும் நிகழ்ச்சி மற்றும் தாலி அறுப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் கோவில் கமிட்டி தலைவர் ஆசை பூஜைகள் செய்தார். பிதர்காடு வனக்காப்பாளர் பிரபு, நிர்வாகிகள் பிந்து, முத்தையன் வீரான், கண்ணன், செல்வரத்தினம் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். நிகழ்ச்சிகள் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் திருநங்கைகள் பங்கேற்றனர்.