பந்தலூர் கோவில் திருவிழா; தீ மிதித்து, கொதிக்கும் நீரை உடம்பில் ஊற்றிய பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2024 12:05
பந்தலூர்; பந்தலூர் அருகே சேரம்பாடி டான்டீ சரக எண் 4-ல் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 38 ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா கடந்த 10 ஆம் தேதி காலை கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவினை கோட்டை மேலாளர் சிவகுமார், உதவி கலை நடத்துனர் குமரேசன் துவக்கி வைத்தனர். அன்று இரவு கரகம் பாதித்தல் மற்றும் மறுநாள் காலை பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம், அம்மன் சப்பாரா ஊர்வலம் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு சென்று பூஜைகளை பெற்று கோவிலுக்கு திரும்பினார்கள். தொடர்ந்து கங்கையிலிருந்து பால்காவடி பறவை காவடி அக்னி காவடி அழகு குத்தி காவடிகள் மற்றும் பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் பூ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டதுடன், மாவிளக்கு பூஜை கரகம் குடி விடுதலுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் இணைந்து செய்திருந்தனர். திருவிழாவில் பக்தர் ஒருவர், பகவதி அம்மன் வேடமிட்டு அருளாசி வழங்கியதுடன், கொதிக்கும் நீரை உடம்பில் ஊற்றி பக்தர்களை மெய்சிலிர்க்க செய்தார்.