திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் புஷ்ப பல்லக்கு வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2024 04:05
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர கோவிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அடியார்கள் நால்வர் புஷ்பபல்லக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. புஷ்ப பல்லக்கு உற்சவத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய அடியார்கள் நால்வரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 19ம் தேதி திருத்தேரோட்டம், 20ம் தேதி சனீஸ்வர பகவான் தங்ககாக்கை வாகனத்தில் வீதியுலா, 21ம் தேதி தெப்போற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ மத்சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.