வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலில் வழிபாடு செய்தார்.
லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் இன்று (மே 14) பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் கங்கை நதியில் சிறப்பு பூஜைகள் நடத்தினார். வேத பட்டர்கள் மந்திரம் ஓத, பிரதமர் கங்கை நதியில் மலர்கள் தூவி வணங்கினார். தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலில் வழிபாடு செய்தார்.