இலங்கை அசோகவனத்தில் உள்ள சீதா தேவி கோவிலுக்கு செல்லும் திருப்பதி லட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2024 11:05
சென்னை; இலங்கை அசோகவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீதா தேவியின் கோவில் மகா கும்பாபிஷேகத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5,000 லட்டுக்களை அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இலங்கை அசோகவனத்தில் உள்ள சீதா தேவி கோவிலுக்கு குரோதி வருடம் வைகாசி மாதம் வளர்பிறை 06ம் நாள் (19.05.2024 ) காலை 9.00 மணி முதல் 11.00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. ராமபிரானின் அருளுடன் சீதாபிராட்டியின் ஆசியுடன் நடைபெற உள்ள இந்த விழாவில் 17.05.2024 வெள்ளிக்கிழமை கிரியாரம்பம் காலை 8.00 மணிமுதல் காலை கர்மாரம்பம், தீர்த்தம், கிரகப் பிரதர்ஷணம், சாந்திகள், பூர்வாங்க கிரியைகள் மாலை கடகஸ்தாபனம், யாக பூஜை ஹோமம், ஸ்தூபி தீப யந்திர பிம்பஸ்தாபனம் நடைபெறுகிறது. 18.05.2024 எண்ணெய்க்காப்பு மற்றும் அயோத்தி புனித சரயு நதியிலிருந்து புனித தீர்த்தக் கலசங்களுடன் காலை 7.00 மணிக்கு பால்குட பவனியும், சுவாமி ஊர்வலமும் நுவரெலியா நகரத்தில் இருந்து ஸ்ரீ சீதையம்மன் ஆலயம் நோக்கி புறப்பாடும் நடைபெற உள்ளது. இதற்காக சென்னை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு அட்வைஸரி கமிட்டி தலைவர் ஜே சேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.