பதிவு செய்த நாள்
15
மே
2024
05:05
தொண்டாமுத்தூர்; சுண்டபாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
சுண்டபாளையத்தில், பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்தாண்டு, கடந்த, 7ம் தேதி, கணபதி ஹோமத்துடன் சித்திரை திருவிழா துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை, நகைப்பெட்டி அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு, சித்திரைச்சாவடி வாய்க்காலை ஒட்டி உள்ள தோட்டத்தில் இருந்து, கரகம், பால்குடம், தீர்க்கக்கூடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்துவரப்பட்டனர். அதன்பின், பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கப்பட்டது. தொடர்ந்து, மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். நாளை மாலை மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.